மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் தியாகராஜன் , ராஜ கண்ணப்பன் பெரிய கருப்பன் மற்றும் திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம் , கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் வரவேற்பளித்தனர் .

மதுரை திருமங்கலத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோர் திமுகவில் இணையும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மீண்டும் மாலை 6 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் சென்னை செல்கிறார் .




