• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நடிகர் சூர்யாவின் 46 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

Byஜெ.துரை

Mar 2, 2026

நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46 -வது திரைப்படத்தை வெங்கி அட்லூரில் இயக்கி முடித்துள்ளார்.இதற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.

படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சூர்யா ஒரு குழந்தையை தூக்கி செல்வது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

மேலும் இப்படம் இந்தாண்டு ஜூலையில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.