• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் நியாயவிலை கடை அமைக்க பூமி பூஜை..,

ByKalamegam Viswanathan

Feb 26, 2026

சோழவந்தான் பேரூராட்சி பேட்டை 1வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைத் தலைவர் லதா கண்ணன் செயல் அலுவலர் செல்வகுமார் பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் கிரி மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூமி பூஜை நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் கொத்தாலம் செந்தில்வேல் குருசாமி நிஷா கௌதம ராஜா செல்வராணி பேரூராட்சி பணியாளர்கள் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு சோனை பூவலிங்கம் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.