• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவதாக உள்ள கேள்விக்கு கமல்ஹாசன் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 21, 2026

மதுரையில் நடைபெறும் மக்கள் நீதி மையம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு:

எனக்கு நெகோஷியசன்ஸ் இல்லை கடமை உள்ளது. நெகோஷியேஷன் அவர்கள் எனக்காக செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு:

எத்தனை தொகுதிகள் என்று சொல்ல முடியாது. எப்படியும் நாங்கள் வெளியிடுவோம். முக்கியமான விஷயம் கூட்டணியில் ஒற்றுமையும் நோக்கமும் தான் அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் நாங்கள் அதை நோக்கி நகர்கிறோம்.

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு:

அனைவரும் வருக தமிழக வெல்க எனக் கூறினார்.