புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத்திற்கு தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் அமிர்த் திட்டத்தின் கீழ்
10 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது
அரசு சார்பில் அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்னர்
அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு வருகை தந்தார் மீண்டும் குடிநீர் குழாயை விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் பேசுகையில் இலுப்பூர் அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அமிர்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று தற்போது முடிந்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இன்று சதவீத பணிகள் முடிவு பெற்று இன்று அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது
90 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது இன்னமும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை
விரைந்து பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும் இதை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை
மக்கள் திட்டத்தை நான் வரவேற்கிறேன்
மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது ஆகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
மக்கள் எதிர்பார்த்தது ஒன்று சேர வேண்டும் என்பதுதான் அதேபோல் நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம்
கூட்டணிக்குள் ஒரு சில கட்சிகள் வராதது எந்த தாக்கத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்படுத்தாது ஏனென்றால் மக்கள் மாற்றம் வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்
ஆகையால் நாங்கள் தடம் மாறாமல் தடுமாறாமல் இருக்க வேண்டும்
அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவை வாழ்த்தி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் பேசியது உண்மையான அதிமுகவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டசபை ஆக்கபூர்வமாக விவாதத்தோடு நடைபெற்றது ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித புதிய திட்டமும் இல்லாமல் ஆக்க பணிகள் இல்லாமல் நடைபெற்றது தான் நாங்கள் பார்க்க முடிந்தது…..
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவேரி வைகை குண்டாக இணைப்பு திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த திட்டத்தில் எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல் திட்டத்தை திமுக அரசு முடக்கியது வேதனையை அளிக்கிறது






