• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா..,

ByKalamegam Viswanathan

Feb 17, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தாருக்கும் திண்டுக்கல் பங்காளிகளுக்கும் பார்த்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு தொட்டுச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பின்னர் சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சோழவந்தான் வைத்தியநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பங்காளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.