• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Feb 13, 2026

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய அரசு சார்ந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தருவதாகவும் தமிழினை புறக்கணித்து வருவதாகவும் இதனை மத்திய அரசு நிறுத்தி தமிழ் பாடத்தை தமிழ்நாட்டில் கட்டாயமாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிரதமர் மோடி உலக அளவில் திருவள்ளுவர் மற்றும் தமிழ் மொழியை பற்றி பேசி வருகிறார். ஆனால் என் தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் மொழியை அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

5000-ம் ஆண்டுகளாக பேசக்கூடிய தமிழ் மொழி தற்பொழுது மத்திய அரசு நடத்தக்கூடிய பள்ளிகளில் தமிழ்நாட்டில் இல்லாததால் இது வேதனை அளிப்பதாகவும் இதற்கு மத்திய அரசு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.