• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார்..,

BySeenu

Feb 12, 2026

கோவை நஞ்சப்ப சாலையில் உள்ள பார்க் எலஞ்ச தனியார் அரங்கில் ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இ இச்செய்தியாளர் சந்திப்பிற்கு பாலிசி பஜாரின் ஆயுள் காப்பீட்டின் (தெற்கு) செயல்பாட்டுத் தலைவர் டேவிட் ஆஸ்கார் தலைமை தாங்கினார்.

செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தென்னிந்தியாவில் குறிப்பாக கோவை மக்கள் கல்வி அறிவு மற்றும் வளர்ந்து வரும் தேவைக்கு வலுவான சந்தையாக உருவெடுத்துள்ளன .குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வு போன்ற லைஃப் ஸ்டைலுக்கான நிதி திட்டமிடல் குறித்து வாடிக்கையாளர்கள் அதிகளவில் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். மேலும் பகுதியில் பாலிசி பஜாரின் இருப்பு நுகர்வோர் எதிர்பார்ப்புகளை நேருக்கு நேர் நிவர்த்தி செய்வதிலும் முழுமையாக சேவையாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

மாறிவரும் நுகர்வோர் போக்குகள், 2022 மற்றும் 2026 க்கு இடையில் நீண்ட கால சேமிப்பு தேவைகள் குறித்த விசாரணைகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் பாலிசி பஜார் டேர்ம் மற்றும் சேமிப்புக்கான காப்பீட்டு துவையல் கூர்மையான அதிகரிப்பை கண்டுள்ளது.மாத சம்பளத்தில் பணிபுரியும் இளம் ஊதியதாரர்கள் அதிகமாக டேர்ம் காப்பீடு திட்ட வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு பதிலாக காப்பீடியாளர்களே பிரிமியம் செலுத்தும் பிரீமியத்தை தள்ளுபடி செய்யும் திட்டங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்று வருகின்றன. காப்பீட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்கு பாலிசி பஜார் முன்னுரிமை அளிக்கிறது.

பாலிசி பஜாரின் ஆயுள் காப்பீட்டு நடவடிக்கைகள் 30க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கியது, 3000+ ஆலோசகர்கள் உள்ளூர் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் சுமார் 40 % நேரடி ஈடுபாடுகள் மூலம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.