• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விஜயுடன் போவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடியாமல் திமுகவுடன் செல்கிறார்கள்-நயினார் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 6, 2026

மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட போது இதே இடத்தில் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் கூறுகையில்:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு என முதல்வர் சொன்னார். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் கஞ்சா நிறைந்த, கற்பழிப்பு நிறைந்த காவல்துறையினரை கற்பழிக்கும் தமிழ்நாடு ஆக உள்ளது.

பிரதமர் மோடி அவர்களும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அமமுகா பொதுச் செயலாளர் தினகரன் அவர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம் அவர்கள் என இன்னும் நீங்கள் எதிர்பார்க்கின்ற பிற கட்சிகளும் சேர்ந்து வருகிற 28ஆம் தேதி பாரத பிரதமர் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். நக்கீரர் பிறந்த இந்த மண்ணில் குற்றங்களை கலைந்து பேச பாரதப் பிரதமருடன் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அவர்களுடன் 10 லட்சம் பேர் கூட்டம் வரவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் உள்ளனர். இடத்தை ஆய்வு செய்து சிறப்பாக நடத்துவதற்கு வந்துள்ளோம்.

திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவும். தேர்தல் அறிக்கை நிறைவேற்றாத அரசு பழைய ஓய்வூதிய திட்டம் என எதையும் நிறைவேற்றாத அரசு. அந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

பல லட்சம் கற்களால் எய்ம்ஸ் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது. பணிகள் முடிந்த பிறகு திறந்து வைப்பார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் வந்த இதே இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் யாரும் இல்லை என்று கேட்டீர்கள். திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக சொன்னீர்கள் ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியில் அமைச்சரவையில் இடம் கேட்கிறார்கள். கனிமொழி ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார் இதுகுறித்து யாரும் கேட்கவில்லை.

பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று பேசுகிறீர்கள் தமிழகத்திற்கு நிதி பற்றி பேசும்போது திருப்பரங்குன்றத்திற்கு மதுரைக்கு என்று தனியாக நிதி ஒதுக்குகிறார்களா ஒட்டுமொத்தமாக ஒதுக்கி பிரித்துக் கொடுப்பார்கள்.

ரயில்வேயில் 7300 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆயுர்வேத துறைக்கு பத்தாயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். மாவட்டம் தோறும் மகளிர் விடுதிக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தூத்துக்குடியில் விமான நிலையம் 350 கோடி ரூபாய் அது வரக்கூடிய நான்கு வழி சாலை தமிழகத்திற்கு தானே போடுகிறோம் அதுகூட முதல்வருக்கு தெரியவில்லை.

அண்ணன் இபிஎஸ் முதல்வராக இருந்த போது 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். நீங்கள் ஒரு மருத்துவக் கல்லூரி யாவது கொண்டு வந்தீர்களா. கேட்டால் டப்பா எஞ்சின் என்று சொல்கிறீர்கள் உங்கள் ஆட்சி கஞ்சாவில் ஓடுகிற இன்ஜின்.

வான்வழி, கடல் வழி, நிலவழி போக்குவரத்து இருந்தால் தான் நாடு முன்னேறும்.

காங்கிரஸ் கட்சி அவர்கள் கூட்டணி பற்றி தான் பேச வேண்டும் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க தயாரா. அவர்களால் தனியா நிற்க முடியுமா, எப்படியாவது விஜயுடன் போவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடியாமல் திமுகவுடன் செல்கிறார்கள்.

அண்ணா திமுகவில் விமர்சனம் செய்ய விஜய்க்கு என்ன இருக்கிறது ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை இன்னும் விசிலை வைத்து அடித்துக்கொண்டு இருந்தாக்க அதெல்லாம் ஒன்னும் நடக்காது.

ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் ஒரு பபூன் அவர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

தமிழ் பற்றி நிதியமைச்சர் மற்றும் கமலஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு:

அந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பது யார். நிதியமைச்சர் அன்று இருந்த பெரியவர் சொன்ன கருத்தை பேசினார் நிதியமைச்சர் கருத்து அது அல்ல.

மதுரை வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வாரா என்ற கேள்விக்கு:

*பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்ல வாய்ப்புகள் நிறைய உள்ளது. காரணம் பெரும்பான்மை சமுதாய மக்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை என மக்களின் வேற்று இருந்து கொண்டே இருக்கிறது. எனவே பிரதமர் வந்த பிறகாவது தீபம் ஏற்ற முடியுமா என்கிற எண்ணம் உள்ளது. ஆகவே பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என கூறினார்.