• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மூதாட்டியை அலைக்கழிக்கும் மின்சார வாரியம்…ஆட்சியரிடம் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Feb 6, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி குருவம்மாள் முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வசித்து வந்தார் இவரது மகன் மகள் திருமணம் முடிந்து வெளியூர் சென்று விட்ட நிலையில் தான் மட்டும் ஜீவனாம்சம் நடத்தி வந்தார் இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாக கூறி கடந்த 2023 ஆம் ஆண்டு 90 வயது மூதாட்டி குருவம்மாள் வீட்டை இடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளி பள்ளம் கிராமம் நிலக்கோட்டை தாலுகாவாக இருந்தபோது பட்டா வாங்கி வைத்துள்ளார் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வரை வீட்டு வரி ரசீது செலுத்தி வந்துள்ளார் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறி நெடுஞ்சாலை துறையினர் வீட்டை இடித்துச் சென்ற பிறகு வீட்டை மறுபடியும் கட்ட வேண்டும் என கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஆனால் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்சார அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பு கேட்டும் மனு அளித்த நிலையில் அவர்கள் வீட்டு வரி ரசீது கொண்டு வர கூறி திருப்பி அனுப்பி விட்டனர். வயதான காலத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊராட்சி மன்ற அலுவலகம் மின்சார வாரியம் அலுவலகம் என மாறி மாறி அலைந்த நிலையில் தற்போது குடியிருக்க வீடு இன்றி மகன் மகள் பேரன்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் தங்கி தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். மேலும் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் அருகில் உள்ள அரசு பள்ளியில் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு ஜீவனாம்சம் நடத்தி வருகிறார்.

. இவரது வறுமை நிலைய கருத்தில் கொண்டு இவரது மகன்கள் மற்றும் மகள்கள் முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி வீட்டு வரி ரசீதை கேட்டபோது நெடுஞ்சாலை துறையினர் பணிகளை முடிக்கவில்லை எனக் கூறி அழைக்கழித்ததாக கூறப்படுகிறது மின்சார வாரியமும் மின் இணைப்பு வழங்க மறுத்து வருகிறது இது குறித்து விசாரிக்க சென்ற நபர்களிடம் பேசிய குருவம்மாள்

90 வயது நிரம்பிய தனக்கு ஊராட்சி நிர்வாகமும் மின்சார வாரியமும் நெடுஞ்சாலைத்துறையினரும் தன்னை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் நேரடியாக விசாரணை செய்து மின் இணைப்பு வீட்டு வரி ரசீது வழங்கி உடனடியாக வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். தனது கடைசி காலத்தில் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக 90 வயது மூதாட்டி கூறுவது வேதனையாக உள்ளது. என்று அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்.