தமிழகத்தில் உள்ள குளங்களை தூர்வாரினால் மட்டுமே அதிகளவு தண்ணீர் தேங்கி விவசாயத்துக்கு பயன்படும் என்பதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதாலும் , அரசு நிதி ஒதுக்கி குளங்களை தூர்வாருவது கடுமையான பணச்செலவை அரசுக்கு ஏற்படுத்தும் என்பதாலும், வண்டல்மண் தேவை இருப்பதாலும், விவசாயிகளே நேரடியாக குளங்களை தூர்வார தயாராக இருந்ததாலும், குளங்களை தூர்வாரி வண்டல்மண் எடுப்பதற்கான அனுமதியை மாநிலம் முழுவதும் தமிழக அரசு வழங்கியது.
குமரி மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அவர்களுடைய கடுமையான முயற்சியினாலும் , மாவட்ட SP.திரு. ஸ்டாலின்* உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடைய ஒத்துழைப்பினாலும்.

மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டு…. அதைத் தொடர்ந்து தூர்வாரும் மணிகள் வேகப்படுத்தப்பட்டன. சுமார் 10 லட்சம் கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்து குளங்களின் தண்ணீர் கொள்ளளவை அதிகரித்து மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்று முழு முயற்சியோடு பணியாற்றப்பட்டது. விவசாயிகளும் ஆர்வத்தோடு தூர்வாரினர்.

தூர்வாரிய மண்ணை பயன்படுத்துபவர்கள் உட்பட பலதரப்பினரும் இதன் மூலம் பலனடைந்தனர். குளங்களில் தண்ணீர் கொள்ளளவு அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும், விவசாயிகளையும் பாராட்டினர்.
. பின்னர் அணைகள் திறந்து விவசாயம் நடைபெற்று வந்ததாலும், சிலகுளங்களில் தண்ணீர் தேங்கியதாலும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மட்டும் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
இருப்பினும் மழைதண்ணீர் தேங்காத உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணியானது தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மழைக்காலம் ஆரம்பித்ததால் அப்பணிகளும் செய்ய முடியாமல் நிறுத்தப்பட்டு ஒருசில குளங்களில் தூர்வாரும் பணிகள் பாதியில் நின்றுபோனது.

தமிழக சட்டப்பேரவைக்கு இந்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் சம்பந்தமாக பிப்ரவரி இறுதியில் தேர்தல் அறிவிப்பு’ வெளியாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு வண்டல்மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும் என்று குமரிமாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது, மழைக்காலம் முடிந்து- கோடைகாலம் ஆரம்பித்து குளங்களில் தண்ணீர் வற்றி வருவதாலும், உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பலகுளங்களில் தண்ணீர் இல்லாததாலும் இவ்வருடத்திற்கான தூர்வாரும் பணிகளை ஆரம்பிக்க ஏற்ற சூழல் நிலவுகிறது.
அந்த அடிப்படையில், கடந்த வருடம் ஜூன் மற்றும் மார்ச் மாதங்களில் குமரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட மாவட்ட அரசிதழ்களில் உள்ள குளங்களுக்கு இந்த வருடமும் தூர் வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதோடு, வெளியிடுவதற்கு தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள குளங்களின் – பட்டியலையும் புதிய அரசிதழில் வெளியிட்டு.. அதன்படியும் விவசாயிகள் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில் , தூர்வாரும் அனுமதியை பெறுவதற்காக குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதமாக 300- க்கும் மேற்பட்ட விவசாயிகள்* தண்ணீர் இல்லாத குளங்களில் வண்டல்மண் எடுப்பதற்காக மனுசெய்து காத்திருக்கின்றனர். குறிப்பாக தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட பல்வேறு குளங்களுக்கு தொடர்ந்து மனுசெய்து வருகின்றனர்.
தமிழக அரசு – மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கி இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து – தூர் வருவதற்கான அனுமதியை வழங்கி …..இந்த வருடத்திற்கான குளங்கள் தூர்வாரும் பணியை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஆரம்பித்து வைக்குமா ?* என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே அரசின் கவனத்திற்கு …..
1.குளங்களில் வண்டல் மண் எடுத்தல் 2. இரட்டை ரயில்பாதை திட்டம் & நாற்கர சாலை திட்டம் – போன்றவற்றில் இருந்து குளங்கள், சானல்கள் உட்பட நீர்நிலைகளை பாதுகாத்தல் 3. விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் 4. அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்தல் 5.விவசாய இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்குதல் ……….உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்து எடுத்துச் சொல்வதற்காக –
அகில இந்திய விவசாய தலைவர்.ஜக்ஜித்சிங் டல்லேவால்* தலைமையில், தமிழக விவசாய தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன் அய்யாகண்ணு உள்ளிட்டோர் முன்னிலையில், குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் திரு.வின்ஸ் ஆன்றோ* , தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து விவசாய அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் அகில இந்திய விவசாயிகள் யாத்திரை வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தொடங்க உள்ளது.
இதில் விவசாயிகள்
மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
என குமரி பாசனசங்கங்களின் தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றே அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.










