• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 2, 2026

சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்..

திமுகவிற்கு பாடம் புகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்றத் தேர்தல் அமையும் என பேட்டி…

அதிமுக அறிவித்துள்ள முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிவகாசி அண்ணா காய்கறி சந்தையில் இன்று முன்னாள் அமைச்சர் . ராஜேந்திர பாலாஜி தேர்தல் வாக்குறுதி குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஒவ்வொரு காய்கறி கடைகளுக்கும் சென்ற ராஜேந்திர பாலாஜி காய்கறி கடையில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்தும், தக்காளி, வாழைப்பழம், கொடிக்காய், ஆகியவற்றை சாப்பிட்டபடி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் தை பூசத்தை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தை துவகியுள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு புத்தகமாக வடிமைப்பது மக்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறோம், மக்கள் வியாபாரிகள் பெருவாரியான ஆதரவை அளித்து வருகிறார்கள்,

மக்களும் வியாபாரிகளும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்து வருவது எங்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

திமுக மத வழிபாட்டிற்கு எதிரானவர்கள் இல்லை என எம்.பி அ.ராசா தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எந்த மதத்தையும் புண்படுத்துவது போல் பேசுவது அரசியல் கட்சிகளுக்கு அழகல்ல, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி எல்லா மதங்களையும் தங்கள் இஷ்ட தெய்வங்களாக வழிபட்டு எல்லா மத வழிபாட்டு தளங்களுக்கும் சென்று வழிபடக்கூடிய பக்குவம் பெற்றவர்கள், இதைத்தான் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்

எல்லா மதங்களை ஒன்றிணைத்து செயல்படும் அரசாக அதிமுக அரசு அமையும்,

ஆனால் திமுக அப்படி அல்ல, ஒரு பக்கம் நல்லவர்கள் போல் நடித்து நம்பியவர்களை ஏமாற்றுவார்கள்

கிறிஸ்தவர்களும், இஸ்லாமிய மக்கள் ஆதரவு கொடுக்கும் அளவிற்கு திமுகவினர் நல்லவர்கள் கிடையாது

எடப்பாடி பழனிச்சாமி ஒருவரால்தான் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செயல்பட முடியும், சமூகமான அரசியலை தமிழகத்தில் ஏற்படுத்த அதிமுக ஆட்சி அவசியம்

திமுக ஆட்சியில் நடக்கும் சீர்கேடு, அட்டூழியம், அராஜகம் அனைத்தையும் முருகன், அல்லா, யேசு என எல்லா மத இறைவனும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்

திமுகவின் ஆட்சியை விரட்டியடிக்கும் இறைவனின் அருளாசி எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது

தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தான் வெல்லும்

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் ஆணவம் அகங்காரத்திற்கு அளவே கிடையாது என்பதற்கு கரூரில் கல்குவாரியில் தனியார் செய்தியாளர் தாக்கப்பட்டது சம்பவமே முன் உதாரணம்

இதுபோன்ற ஈனத்தனமான செயல்களை அதிமுக அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ, மாவட்ட செயலாளர்களோ செய்ய மாட்டார்கள், அப்படி செய்தால் கட்சியில் மறு நிமிடமே கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால் திமுகவில் அராஜகம் செய்பவர்களை ஊக்குவிக்கும் பணியைத்தான் செய்வார்கள், எளியவர்களை தாக்கு வதை திமுக கைவிட்ட வரலாறே கிடையாது

அதற்கு சம்மட்டியடியாக 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு படிப்பினையை பாடத்தை புகட்டும்,என கூறினார்.