கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் தியாகு என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கரும்புகை அதிகமாக வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அரைமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ முழுமையாக கட்டுப்படுத்தபட்ட நிலையில் , விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களை குடியிருப்பு பகுதியில் இருத்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.










