மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சேவல் கொடியோன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலை வேல்வியினை நடத்தினர். புதன் கிழமை மங்கள வாத்தியம் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் யாக சாலை நிகழ்ச்சி நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை கணபதி பூஜை உடன் தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காளியம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. விழாவில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் அம்மா பேரவை துரைக்கண்ணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தென்கரை ராமலிங்கம் இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் உமா மாரி அப்பாச்சி கண்ணன் மற்றும் கச்சிராயிருப்பு மேல மட்டையான் கீழ மட்டையான் மேலக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கச்சிராயிருப்பு கிராம தேவேந்திர குல வேளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.






