ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டாமல் அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை, அதையெல்லாம் அவர் நினைவுபடுத்தி பேசினால் நன்றாக இருக்கும்
பாரதிய ஜனதா கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒபிஎஸ்,

எடப்பாடி பழனிச்சாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓபிஎஸ்-யிடம் இருந்த பலரும் இபிஎஸ்-யிடம் சென்றுவிட்டார்கள்
ஒபிஎஸ்-ன் நிலமை இன்றைக்கு மிகவும் கவலைக்குரியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது
முழுக்க முழுக்க பாஜக ஓபிஎஸ்-ஐ நம்ப வைத்து கழுத்து அறுத்திருத்திருக்கிறது
முக்குலத்தோர் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்தி, டிடிவி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணியாக்கப்படுகிறது என்றால் முழுக்க முழுக்க பாஜகவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது
10 நாட்களுக்கு முன் இபிஎஸ் பற்றியும் மற்றும் பாஜகவை பற்றியும் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள்,
உலகத்தில் யார் ஒருவர் மக்களை முட்டாள் என நினைக்கிறார்களோ அவர்கள்தான் இந்த உலகத்தின் அடிமுட்டாள்
இபிஎஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என கூறிவந்த டிடிவி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று
சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது
விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும், ஆனால் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும், ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் தேர்தல களத்தில்தான் தெரியும்
விசில் சப்தம் என்பது ஒருவர் இருவர் ஊதினால் கேட்க பரவாயில்லாமல் இருக்கும், கூச்சல் போட்டால் மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள்

பாஜகவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா போன்ற கட்சிகளை துண்டாக்குவது, என இப்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள கட்சிகளை பிளவுபடுத்தி, ஜாதி, மதம், கருத்தியல் ரீதியாக பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் கட்சிதான் பாஜக
அதே முயற்சியைத்தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள், ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் காலூன்ற முடியாது, வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றாது.






