உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா., இவர் மீது தமிழ்நாடு அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து நகர் மன்ற தலைவர் பதவியை தகுதி நீக்கம் செய்து அரசாணை வெளியிட்டது., இதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்., ரத்து செய்யப்பட்ட உத்தரவை அமல்படுத்தாத நிலையில் மீண்டும் வழக்கு தொடர்ந்த சகுந்தலாவிற்கு கடந்த 23 ஆம் தேதி அரசின் குற்றச்சாட்டுகளுக்கு முறையான விளக்கம் அளிக்காத சூழலில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்த உத்தரவை அமல் படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மீண்டும் உத்தரவிட்டனர்.,

இந்நிலையில் இன்று மீண்டும் நகர் மன்ற தலைவராக பொறுப்பேற்க வந்த சகுந்தலாவிற்கு நகராட்சி ஆணையாளர் இளவரசு அனுமதி அளிக்காத சூழலில், நகராட்சி அலுவலகத்திற்குள் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களுடன் நகராட்சி சேர்மன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., மேலும் நகராட்சி நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்று அவர்களின் உத்தரவுபடி மீண்டும் நகர் மன்ற தலைவராக பதவி ஏற்க அனுமதி அளிப்பதாக நகராட்சி ஆணையாளர் இளவரசு தொலைபேசி வாயிலாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.,
திமுகவில் இருந்து வெற்றி பெற்று சேர்மன் ஆகிய சகுந்தலா, பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.,






