மதுரை மாவட்டம் பேரையூர் சாலையில் உள்ள அற்புதக் குழந்தை ஆலயத்தில்
கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.,

இதில் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஏஞ்சல்ராஜ் செயலக முதல்வர் மதுரை உயர்மறை மாவட்டம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.
சான்று வாழ்வில் இறையாட்சி வளர்ப்போம் என்கிற மையச் சிந்தனையின் கீழ் நொபிலி மறைபணி நிலைய இயக்குனர் அருள்தந்தை .பால் பிரிட்டோ அவர்கள் மறையுரை வழங்கினார்கள்., திருப்பலிக்கு பின் குழந்தையை திருவுருவம் தாங்கிய திருத்தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து துவங்கி பேரையூர் ரோடு சிட்டி யூனியன் பேங்க் தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு, டிபிரோடு, தேவர் சிலை வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.,

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்த இக்னேசியஸ் ஸ்டாலின் அவர்களோடு இணைந்து அருள் சகோதரிகளும் அன்பிய மற்றும் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இறைமக்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்.






