விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமியாபுரம் பகுதியில் தனியார் கல்குவாரி அமைக்க பொதுபொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது,

ஏற்கனவே இந்த கல்குவாரி அமைப்பதற்கு கருத்துக்கு கூட்டத்தை இப்பகுதி இப்பொழுது மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ஏ லட்சுமியாபுரம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும் அப்பகுதியில் கல்குவாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
இதனை அறிந்த பொதுமக்கள் கல்குவாரி பகுதியில் அமைந்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு நிலத்தடிநீர் வளமும் பாதிக்கப்படும் மேலும் கல்குவாரிக்கு வரும் கனரக வாகனங்களால் பல்வேறு விபத்துகளும் சுற்றுச்சூழல் சீர்கேடும் கடுமையாக பாதிக்கும் என்பதை வலியுறுத்தி ஆலங்குளம் ராஜபாளையம் செல்லும் பிரதான சாலையில் ஏ. லட்சுமிபுரம் சேர்ந்த கிராம பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. இதனால் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்றன.
இதனை அறிந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் கல்யாணி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தைக்கு சென்ற போது அவரது வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உடனடியாக கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டத்திற்கு பின்னர் பொதுமக்களிடம் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்த சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனை எடுத்து காவல்துறையில் போக்குவரத்தை சரி செய்தனர்.






