கோவையில் விசில் சின்னத்துடன் விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என த.வெ.க.வினர் ஒட்டியுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்ப்பு..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசியலில், தற்போது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும் சக்தியாக உருவெடுத்து இந்திய அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில்,அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அதிகர பூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது
இது த.வெ.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,கோவையில் பல்வேறு இடங்களில் விசில் சின்னத்துடன் த.வெ.க. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






