• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சிலம்பப்போட்டிக்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Jan 23, 2026

வரும் ஜனவரி:26 ம்தேதி இராஜபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் 11வதுமாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என விழா கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் கொடுத்தனர்.

அழைப்பிதழை பெற்றுக்கொண்டு அவசியம் வருகை தருவதாக தெரிவித்து மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு ரூ50ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார்.

வரும் பிப்ரவரி:08ம் தேதி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சிவகாசி சிலம்பகலைக்கூடம் நடத்தும்… விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி 2026ற்க்கு ரூ20ஆயிரம் நிதியினை முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.