கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்க கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அகற்ற வேண்டும். மேலும் பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள புல் புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட இறச்சகுளம் பகுதியில் பழமையான அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்க கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அதை இடித்து அகற்றி புதிய கலையரங்கம் அமைத்து தர வேண்டும். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் புல் புதர்கள் முளைத்து விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்துள்ளது . இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற முறையில் படித்து வருகின்றனர். புல் புதர்களை அப்புறப்படுத்தி பள்ளி வளாகத்தை முழுவதும் சுத்தப்படுத்தி மாணவர்களின் நலனை காக்க வேண்டும்.

மேலும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்துள்ள புதர்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே புதர்களை முற்றிலுமாக அகற்றி சுகாதாரமான சூழ்நிலையை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.





