விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரின் பெயரில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜெகதீஸ்வரி வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் பிரிவு சேர்ந்த பொம்மிஸ் ராஜா தலைமையில் இலவச சட்ட ஆலோசனை மைய மற்றும் நூலகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலக்கூடிய 108 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இராஜபாளையம் தென்காசி. சிவகிரி தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு வழக்கறிஞர் பொம்மிஸ் ராஜா கட்சியின் துண்டு அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.






