செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி அதிமுக 10வது வார்டு, மூங்கில் ஏரி பகுதியில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, 10வது வட்ட கழக செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட கழக துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப. தன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,
எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஏராளமானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் அப்பு வெங்கடேசன்,
நாகல்கேணி அனிஷ், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் மகளிர் அணியினருக்கு புத்தாடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் அவர்களின் மக்கள் நலத் திட்டங்களை நினைவுகூர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.





