• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

ByP.Thangapandi

Jan 17, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியார் பொங்கல் என 109 பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்., இதில் வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.,

தை பிறந்தால் வழி பிறக்கும் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் தாய்த்தமிழ்நாடு தலை நிமிர தன்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிற எடப்பாடி கே பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என சூளூரை ஏற்கின்ற எடப்பாடியார் பொங்கல் உசிலம்பட்டியில் நடைபெற்று இருக்கிறது.,

இன்றைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவக்கி வைப்பதற்காக மதுரைக்கு வர இருக்கிறார் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம் அவருடைய கவனத்திற்கு மதுரை மக்கள் கவனத்திற்கு மெட்ரோ ரயில் அறிவித்தார்கள் செயல்படுத்தலுக்கு ஒரு திட்ட அறிக்கையை கூட கொடுக்க முடியாத ஒரு அரசாக இருக்கிறது.,

58 கால்வாய் திட்டத்தை 40 ஆண்டு கால கனவுத் திட்டத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் தலைமையில் அம்மாவுடைய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் அரசாணை வெளியிடுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது இப்பொழுது 5 ஆண்டுகள் இந்த அரசு முடிந்துவிட்ட பிறகும் 58 கால்வாய் க்கு அரசாணை வெளியிடவில்லை ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் போராடித்தான் தண்ணீரை பெற வேண்டும் என்ற சூழல் அவல நிலை இருக்கிறது எனவும்.,

முல்லை பெரியார் 152 அடி 142 அடி என்று உயர்த்திக் கொள்வதற்கும் அணை பலமாக வலிமையாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு சட்ட போராட்டத்தில் நடத்தி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்த அந்த சட்ட போராட்டம் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அதனைப் பெற்றுக் கொடுத்தார் அதை இதுவரை ஐந்தாண்டு காலம் ஒரு முறை கூட 152 அடி நீர் தேக்குவதற்கு முதல்வர் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும்.,

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மதுரை அடையாளமாக இருக்கக்கூடிய சர்க்கரை ஆலை புனரமைத்து இயக்கக்கூடிய 23 கோடி எடப்பாடி யார் தலைமையில் ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தோம் 5 வருடம் ஆகிவிட்டது குழு அமைத்தார்கள் திமுக அரசு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்து 27 கோடி ரூபாய் புனரமைப்பு செய்து ஆளை இயங்கும் என அறிக்கை கொடுத்தார்கள் அந்த அறிக்கை குப்பையின் கிடைக்கிறது இந்த அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.,
அலங்காநல்லூர் மண்ணுக்கு வந்த முதலமைச்சர் அவர்கள் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் துவங்குவதற்கு முயற்சி எடுப்பாரா மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.,

காளை வளர்ப்போருக்கு ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள் அது இந்த மேடையில் அறிவிப்பார் ஆட்சி முடிய போகிறது முடிவுரை எழுதப் போகிறார்கள் அடுத்த ஆட்சி புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஆட்சிதான் அமையும் இரட்டை இலை ஆட்சி மலர இருக்கிறது.,

முதலமைச்சர் அவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் கொடுத்து நிறைவேற்றுவாரா அதேபோன்று 5000 ரூபாய் தருகிறேன் என்று அன்றைக்கு சொன்னார்கள் முதலமைச்சர் பதவி கையில் வந்த பிறகு இந்த 5 ஆயிரத்தை மறந்து விட்டு இன்றைக்கு 3000 ரூபாய் கொடுக்கிறார்கள்.,
2500 ரூபாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடியார் கொடுத்தார்கள் ஆனால் ஆண்டுக்கு 100 ரூபாய் வீதம் இன்றைக்கு பொங்கல் பரிசு வழங்கியிருக்கிறார் அன்றைக்கு அவர் சொன்ன 5000 கொடுக்காமல் 3000 ரூபாய் கொடுத்திருக்கிறார்., கொடுத்த வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்து விட்டுள்ளார் இன்றைக்கு கொடியாசைத்து வைக்க வந்துள்ளார்.,

நேற்றைக்கு துணை முதல்வர் வருகைக்காக வாடி வாசல் 3 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டுள்ளது இளவரசர் வருகைக்காக
இன்றைக்கு மன்னர் வந்ததற்கு பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மன்னர் காலத்தில் இருந்து மக்களுக்கான ஜல்லிக்கட்டாக மண்ணின் மைந்தர்களுக்கான ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடி வாசல்கள் நடத்தப்பட்டது.,

ஆட்சியாளர்கள் அந்த வரலாற்றை திருத்தி எழுதி மண்ணின் மைந்தர்கள் உள்ளூர் கிராம கமிட்டி இருக்கும் இது வீர விளையாட்டு அல்ல இது எங்களுடைய பொம்மை விளையாட்டு என்று நடத்தியிருக்கிறார்கள் பரிசு கொடுப்பதில் குளறுபடி காளை பிடிப்பதில் குளறுபடி காளை அவுத்து விடுவதில் குளறுபடி பல்வேறு காளைகளை கனவுகளோடு வளர்ப்பது வாடிவாசலில் சீறி பாய்ந்து வர வேண்டும் என்றுதான் ஆனால் பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கு தொடர்பு இருப்பவர்களுக்கு மட்டுமே காளை அவிழ்த்து விடுவதற்கும் காளை பிடிப்பதற்கும் அனுமதி என்று காளை பிடி வீரர்களும் காளை வரப்போரும் எங்களிடத்தில் முறையிட்டார்கள் அதற்கெல்லாம் தீர்வு எடப்பாடியார் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களாட்சி மலர்கிறபோது மன்னராட்சி முடிவுரை வரும் அப்பொழுது புரட்சித் தமிழர் எடப்பாடி யார் மக்களாட்சிக்கு மகுடம் சூட்டுகின்ற முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து இந்த மக்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேற்றித் தருவார்.,

ஜல்லிக்கட்டு போட்டி முறையாக நடத்தவில்லை ஜல்லிக்கட்டில் நடத்துகிற கவனத்தை விட இளவரசரை வரவேற்கிற அவரை மகிழ்ச்சி படுத்துகிற அக்கரை செலுத்துகின்றார்களே தவிர ஜல்லிக்கட்டை முறையாக நேற்று இரவு இருந்து முந்தைய நாள் இரவில் இருந்து பாலமேட்டில் காத்திருந்தார்கள் சுமார் இரண்டு மணி நேரம் தாமதம் என்று சொல்கிறார்கள் இரண்டு மணி நேரத்தில் எத்தனை காளைகள் அவிழ்த்து விடலாம் கனவுகளோடு வந்திருப்பார்கள் இவர் வந்து உங்கள் கனவு என்ன என்று கேட்கிறார் வாடி வாசலில் காளையை அவிழ்த்து விடும் கனவை சிதைக்கிற இளவரசருக்கு வரவேற்பு கொடுக்கிறதனால் இதனை முறைப்படுத்த வேண்டும் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் கேட்க வேண்டும் அல்லது அமைச்சராவது கவனம் செலுத்த வேண்டும் எப்ப பார்த்தாலும் முறை தவறி செய்ததால் பயங்கரமான கொந்தளிப்பு முதல் பரிசு அறிவித்ததில் குளறுபடி என்று மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்பவர்கள் முறையிட்டு இருக்கிறார்கள். பரிசு பொருட்களும் கொடுக்காமல் கொண்டு போனதால் அதிர்ப்தியில் அதிர்ப்தியின் வெளிப்பாடுதான் உணர்ச்சிப்பூர்வமான செயல்.,

பீகாரின் வெற்றி அதைத்தொடர்ந்து மும்பையின் வெற்றி இனி அடுத்த வெற்றி அறிவிப்பு செய்தி மகிழ்ச்சியான செய்தி இந்த தைத்திருநாளில் வர இருக்கிறது தமிழ்நாட்டில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் சாமானியர் தலைமையில் ஜனநாயகம் மலர்ந்தது இரட்டை இலை மலர்ந்தது தேசிய ஜனநாயக கூட்டணி என் டி ஏ வெற்றி மலர்ந்தது ஆட்சி மலர்ந்தது மக்களாட்சி மலர்ந்தது மகிழ்ச்சி மறந்தது என்ற செய்தி உங்களுக்கு விரைவில் தைக்கிற நாளில் கிடைக்கும்.,

எதிர்க்கிறேன் என்று சொல்கிறவர்களும் எதிர்ப்பவர்களும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சராக புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களை ஏற்றுக் கொண்டு வருகின்ற அந்த நல்ல உள்ளங்களையும் தமிழ் நெஞ்சங்களையும் தமிழர்களையும் வீரத்தமிழர்களையும் லட்சியத் தமிழர்களையும் வெற்றித் தமிழர்களையும் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு இருகரம் கூப்பி தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பார்கள் என பேட்டியளித்தார்.,

இதில் கழக அமைப்புச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவுமான ஐ. மகேந்திரன், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேந்திர பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் பிச்சை ராஜன்,பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,