• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பென்னிகுயிக் பிறந்தநாள் விழா..,

ByKalamegam Viswanathan

Jan 14, 2026

உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஐந்து மாவட்டத்தின் வறட்சி பகுதியை வளம்பெற செய்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளராக பணியாற்றி தனது சொத்துகளை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டிய வள்ளல் திரு ஜான்பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சங்க தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.

விழாமுன்னிலை செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்புரை ஆச்சிராஜா துணைசெயலாளர் பொன் ஆதிசேடன் விழா ஒருங்கிணைப்பு பொருளாளர் செந்தில்குமார் மகாராஜன் ராஜேந்திரன் இதில் விருவீடு முதல் வகுரணி வரை அனைத்து கண்மாய் பொறுப்பாளர்கள் அனைத்து கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகள் நகர்மன்ற அனைத்துகட்சி உறுப்பினர்கள் வணிகர்சங்கங்கள் வர்த்தக சங்கங்கள் நகர் பகுதி அனைத்து சங்கங்கள் மற்றும் பொட்டுலுபட்டி கண்மாய் சார்பாக சரஸ்வதி தலைமையில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவில் பென்னிகுயிக் விருது வழங்கப்பட்டது இதில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணை இயக்குநர் செல்வராஜ் அவர்களுக்கு
58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் பென்னிகுக் விருது வழங்கி கெளரவித்தது.