• Tue. Apr 30th, 2024

கமல்ஹாசனையே இயக்கிய குழந்தை நட்சத்திரம்

சினிமா உலகில் அக்காலம் முதல் இக்காலம் வரை பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.


அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் மட்டுமே பெயரிய நடிகர் நடிகைகளாக உயர்ந்துள்ளனர் என்று சொல்லலாம. இதில் நடிகர் சிம்பு, மீனா, நடிகை ஷாலினி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட இன்று தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளனர்.


அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் கமலை வைத்தே படம் இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குநர் சக்ரி டோலெட்டி. 1983-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தில் அசிஸ்டன்ஸ் போட்டோகிராப்பர் கேரக்டரில் அறிமுகமானார். அந்த படத்தில் கமல்ஹாசனை அவரை அழைத்து போட்டோ எடுக்க சொல்வார். ஆனால் சக்ரி தப்பு தப்பாக போட்டோ எடுத்து கொடுப்பார்.


அதன்பிறகு 1985-ம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னவீடு படத்தில், நடிகை கல்பனாவின் தம்பியாக நடித்திருப்பார். இந்த படத்தில. அவர் பாக்யராஜூடன் நடத்த காட்சிகள் அனைத்து ரசிக்கும்படி இருக்கும். அதன்பிறகு படங்களில் நடிக்காத அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு கமல்ஹாசன் மோகன்லால் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.


மருத்தவரான இவரது அப்பா சினிமா மீதுள்ள ஆர்வத்தினால், ஒருசில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்துள்ளார். அதன் காரணமாக இயக்கநர் பாலச்சந்தர், பாக்யராஜ், கே.விஸ்வதாத் ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் சக்ரிக்கு நடிப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு அமெரிக்காவில் வி.எஃப.எக்ஸ் படித்த அவர், டிஸ்னி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் தசவதாரம் படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் சக்ரி பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்துள்ளார்.


இந்த சந்திப்பின் காரணமாக சக்ரி தசவதாரம் படத்தில் ஸ்ரீராம் என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கமல் நடிப்பில் உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய அவர், அடுத்து அஜித் நடிப்பில் பில்லா 2 படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டராகவும் அவர் நடித்திருப்பார். மேலும் ஹிந்தியில் சோன்ஷி சின்ஹாவை வைத்து வெல்கம் டூ நியூயார்க், தமிழில் நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம், தமன்னா பிரபுதேவா நடிப்பில் கமோஷி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *