புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் எந்த அளவு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி

பாஜகவின் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியமும் சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ அவற்றுடன் சேர்ந்து தணிக்கை வாரியமும் சேர்ந்துள்ளது. பல அதிகாரிகளின் குழுக்களோடு பாஜக தேர்தல் களத்தில் கூட்டணியை கொண்டு வருகிறது. அதனை சந்திக்க திமுக கூட்டணி தயாராக இருக்கிறது…..
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வராததற்கு திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை பாஜக நாங்கள் சொல்வதை கேட்கும் என்று யாராவது நம்பினால் அவர்களைப் போல முட்டாள் வேறு யாரும் கிடையாது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைவருக்குமே தை பிறந்தால் வழி பிறக்க தானே வேண்டும். நயினார் நாகேந்திரனுக்கு எந்த பக்கம் வழி பிறக்கிறது என்று பார்ப்போம். தமிழ்நாட்டில் திராவிட மாநகராட்சி தொடர்ந்து நடக்கும் அதுதான் தை பிறந்தால் எங்களுக்கு வழி பிறக்கும். நயினார் நாகேந்திரனுக்கு வேண்டுமென்றால் எங்கேயாவது கவர்னரோ ஒன்றிய பாஜக அரசில் ஏதாவது பதவிகளோ கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்.
எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியை தலைவர் உறுதி செய்வார். தற்போது இருக்கும் கூட்டணி அப்படியே இருக்கும். கூடுதலாக வருபவர்களை எப்படி ஏற்றுக் கொள்வது பற்றி எங்களுடைய தலைவர் முடிவு செய்வார்.

ராமதாஸின் பாராட்டுக்கு நன்றி இது கூட்டணிக்கு வருவதற்கான அச்சாரம் அல்ல. எங்களுக்கு ராமதாஸ் சில கருத்துக்களை எதிராகவும் கூறியிருக்கிறார் ஆதரவாகவும் கூறி இருக்கிறார். அதற்காக அவர் கூட்டணிக்கு வரப்போகிறார் என்று அர்த்தம் அல்ல. கூட்டணி என்பது வேறு பாராட்டுதல் என்பது வேறு.
நீதிமன்றத்திற்கு அனைத்து அதிகாரமும் உண்டு வானளாவிய அதிகாரம் உள்ளது தான் நீதிமன்றம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் மேல்முறையீடு செய்வதற்கு வழி இருக்கிறது. ஒரு நீதிபதி சொல்லுகின்ற தீர்ப்பு சரி என்று அந்த நீதிமன்றத்தோடு முடிவதில்லை மேல் நீதிமன்றத்திற்கு சென்று கீழே உள்ள நீதிமன்ற நீதிபதி சொன்னது தப்பு என்று கூறி வழக்காட முடியும்.
ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும் யார் போய் அச்சுறுத்தினார்களா என்று தெரியும். வீட்டில் இருந்து கொண்டு எங்கேயாவது செல்வார் டெல்லிக்கு சென்று வருவார் சென்று வந்துவிட்டு ஒரு கதை விட்டு செல்வார் ஆளுநர் ஒருவர் இருப்பதே நாங்கள் மறந்து விட்டோம். ஆளுநரை பற்றி எல்லாம் கேட்க வேண்டாம்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் பொழுது ஆளுநர் என்ன செய்கிறார் என்று அன்று பார்ப்போம். கூட்டம் நடைபெறும் பொழுது என்ன செய்யப் போகிறார் என்பதை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது. நல்ல முறையில் நடந்து கொள்கிறாரா அல்லது திரும்பவும் விஷமத்தனத்தை குறும்புத்தனத்தை காமிக்க போகிறாரா என்பதை அன்று பார்ப்போம்.
எத்தனை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆண்டும் மானிய கோரிக்கையின் போது சொல்லி இருக்கிறோம். புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு பள்ளியிலும் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கருத்துக்கொருபவர்களாக அனைவரும் இருக்காதீர்கள். ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் நியமிக்கப்படவில்லை என்பது தவறு.
அதிமுக பாஜக மெகா கூட்டணி அல்ல மெகா ஸ்டார் கூட்டணி வேண்டுமென்றால் அமைக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ள 200 தொகுதிகளை விட அதிகமாக வெற்றியடைவோம் என்பதுதான் எங்களின் எண்ணம்….
இவ்வாறு அவர் கூறினார்




