• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு போட்டி தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Jan 4, 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கானது அடுத்தடுத்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 66 லட்சத்து 98ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடு பணிகளுக்கான இன்று காலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது.

தொடர்ந்து விழா மேடை , குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.