• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ரயில் முன் பாய்ந்து வாலிபர் மரணம்..,

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மகன் ராஜ்குமார், வயது 30 கொத்தனார் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள இருப்புபாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்து உள்ளார்.

தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு இறந்து ராஜ்குமாருக்கு சாவித்திரி என்ற மனைவி உள்ளார்.வயது 27. இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது .குழந்தை இல்லை. ராஜ்குமார் இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. விருதுநகர் ரயில்வே பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் எந்த ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பதை நாம் விசாரித்த போது தற்போது வரை தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று ரயில்வே போலிஸார் தெரிவித்தனர்.