உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும், குடும்ப ஊதியமாக 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதுமாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மதுரை மாவட்ட பொருலாளர் பரமேஸ்வரி தலைமையிலான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு ஊழியராக அறிவித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி வட்டார அளவில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,




