கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா தொடங்கி புத்தாண்டு
பிறக்கும் வரையில் கொண்டாட்டம் மின்னொளியால் ஜொலிக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள்,சாலை ஓர மரங்கள் எல்லாம் வண்ண
விளக்குகள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்களால் அமைக்கப்படும் அலங்கார வளைவை பார்த்து ரசித்ததோடு குடும்பத்தினரோடு செல்ப்பி எடுத்து மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது
மலவிளை தேவாலயத்தில் 76-ஆவது ஆண்டு சபை நாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் தேவாலய வளாகம் முழுதும் வண்ண வண்ண கண்கவர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாளை, ரசகதளி வாழைத்தார் மற்றும் அன்னாசி பழங்களால் அலங்கார வளைவும் அமைக்கப்பட்டு வருவதால் அங்கு குவிந்த பொதுமக்கள் மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயம் முன் குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் இறை இயேசுவின் பிறப்பு தினமும் அதனை அடுத்து வரும், புத்தாண்டு பிறக்கும் நாள் வரை மதம் கடந்த மக்களின் பொது விழா என்பது.
இந்தியாவின் தென்கோடி முனையில்,முக்கடல் சங்கமம் போல், குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மதம் கடந்த மக்களின் ஒற்றுமை விழா.




