மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் 1வது ஊராட்சி, கூத்தியார்குண்டு மந்தைத் திடலில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை டாக்டர் குமரேசன் சங்கரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை,
பெண்களுக்கான சிறப்பு பரிசோதனைகள், குழந்தைகளுக்கான பரிசோதனை,
கண் பரிசோதனை, தோல் நோய் சம்பந்தமான மருத்துவம், இசிஜி,
காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, டாக்டர் குமரேசன் சங்கர் தலைமையில் மருத்துவர்கள் ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.

இதில் கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, தோப்பூர், நிலையூர், ஆகிய ஊரைச்சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பங்கேற்றனர். பாலசுந்தரம், கந்தசாமி, கமலேஸ்வரி, ராமசுப்பிரமணியன், பாலபிரியா, வெற்றிவேல் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.




