• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொழில்முனைவோராக வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Dec 27, 2025

வேலம்மாள் கல்வி குழுமம் சேர்மன் முத்துராமலிங்கம் பேசும்போது

இணைப்பு ” (THE CONNECT)-ன் முதல் முயற்சியாக. இளங்கலை, முதுகலை பட்டம் படித்தவர்கள் கூட வேலை வாய்ப்பின்மையினால், குறைந்த கல்வித் தகுதிகளுக்கான வேலைகளுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விண்ணப்பித்து போட்டியிடும் நிலையும், ஆண்டு வருமானமான 4 லட்சம். 5 லட்சம் வேலைகளுக்கு செல்வதையே பெரியதாக எண்ணும் நிலையும் மாறி, பட்டம் பெற்றவர்கள் அவர்களது பட்டக்கல்வியறிவை பயன்படுத்தி, சொந்தமாக தொழில் தொடங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனும் நோக்கத்தில் இணைப்பு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌ என்றார்.

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்து நிறைய விமானங்கள் மதுரை வந்து சென்றால் தான் மதுரை வளர்ச்சி அடையும். இதற்கு டெல்லியே திரும்பி பாக்குற அளவுக்கு மாணவ மாணவிகள் மற்றும் மற்ற அமைப்பையும் திரட்டி மராத்தான் வைக்கனும். இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நடிகர் சூரி பேசும் போது

உலகத்தில் நம்ம எல்லோரும் முன்னாடி மரியாதையாக நிற்பதற்கு பணம் ரொம்ப முக்கியம் நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பங்களா வைத்திருந்தாலும் உடம்பு சரியில்லை என்றால் இது அனைத்தும் வேஸ்ட் நீ சம்பாதித்தது நீ உருவாக்கிய சாம்ராஜ்யத்தை நீ அனுபவிக்க வேண்டும் வீட்டில் உள்ளவர்கள் அனுபவிக்க வேண்டும் அதுனால உடம்ப பாத்துக்கோங்க.

எனது பெயர் ராம். எனது தம்பி பெயர் லெட்சுமணன். நான் கலெக்டராக இங்கு நிற்க வேணீடிய ஆள். எனது தம்பி லட்சுமணன் இன்ஜினீயராக நிற்க வேண்டிய ஆளு.

நானும் எனது தம்பியும் செனாய் நகரில் உள்ள பள்ளியில் படித்தோம். நாங்க ஆறாம்வகுப்பு படிக்கும் போது எங்கப்பா ஸ்கூலுக்கு வந்தார். நான் ராம் கலெக்டராகனும் என் தம்பி லட்சுமணன் இன்ஜியராகனும். புல் கோப் ஆப்ரேட் பண்ணுகிறேன் என சொல்லி ஒரு கிலோ சிக்கன் ஒரு கிலோ மட்டன் கொடுத்தார். ஆறாம் வகுப்பு பாஸ் இப்படி ஏழாம்வகுப்பு டீச்சரிடமும் சொன்னார். எட்டாம் வகுப்பு டீச்சரிடமும் சொன்னார் எட்டாம் வகுப்புப் பாஸ். இப்படி பள்ளி படிப்பு முடிந்தது.

டீக்கடையில் போய் சேர்ந்து விட்டார். இந்த மாதிரி பெரிய முதலாளியாக வரவேண்டும் கீழிருந்து வா என்றார். அதன் பிறகு பல வேலைகள் செய்து பின்னர் சினிம் ஆசையில் சென்னைக்கு போஅனனேன். ஏழு எட்டு வருஷமாக சினிமாவை என்னால் கண்ணிலே பார்க்க முடியவில்லை. சினிமா காம்பவுண்டே மிதிக்க முடியவில்லை. லாரி கிளீனர் வேலை கிட்டேன் கூட்டி போய்விட்டார்கள். சாக்கடையை அள்ளுகின்ற வண்டியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். அப்புறம் பெயிண்ட் அடிக்க சென்றேன் சென்னையில் இருக்கிற பெரிய கட்டிடங்களில் என் கைப்படாத இடமே இல்லை என்னால் முடியாது என்று சொல்லி எனக்கு பழக்கம் இல்லை.

சினிமா வாய்ப்புக்காக போட்டோ எடுக்க வேண்டும் போட்டோ எடுக்க 20 ரூபாய் அப்ப சாப்பிடவே காசு இருக்காது. சாப்பிட்டால் போட்டோ பிரிண்ட் போட முடியாது என்பதால் ஒரு டி ஒரு பண்ணு அப்படியே ஓடுச்சு டீக்கடையில் அக்கவுண்ட் வச்சு தான் வாழ்க்கை ஓடிச்சு

கௌதம் மேனன்னிடம் போய் நான் போட்டோ கொடுத்தால் எப்படி வாய்ப்பு கிடைக்கும் அவர் ஸ்டைலாக படம் எடுப்பார் நான் கைலி கட்டி மதுரைக்காரன் டா என்பது போல் இருக்கும்.

ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து எனக்கு டிரஸ் அளவு எடுத்த போது எனக்கு கை காலெல்லாம் நடுங்கி கண்ணு கலங்கியது. வாய்ப்பு கிடைத்து ஷார்ட் எடுத்து பின்னர் இன்னொருவர் அந்த கேரக்டருக்கு ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க உடனே சட்டையை கழட்டுங்கள் அதே இடத்தில் சட்டையை கழட்டினேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கண்கலங்கினார்.

ஒரு நிமிடம் உரையை நிறுத்தி மீண்டும் தொடர்ந்து அவர் எல்லோருக்கும் நடக்கும் எனக்கும் நடந்தது ‌ அதன் பிறகு போராட்டம் போராட்டம் தான் அதுக்கப்புறம் ஒரு வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து விட்டேன் அருகில் இருந்தவர்கள் டீ கொடுத்து எழுப்பி விட்டார்கள் 2008ல தான் வெண்ணிலா கபடி குழு படம் வாய்ப்பு கிடைத்தது அஜித் சாரின் ஜி படத்தில் சிறிய வேடம் நடித்தேன்.

ஒருதடவை அஜித் சார் கேட்டார் எனக்கு சண்டைக் காட்சியில் மண்டை உடைந்து விட்டது கூப்பிட்டு யார் நீ பார்த்து பண்றது இல்லையா? எந்த ஊரு? மதுரை சார். உடனே அஜித் அஜித் சார் இந்த மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு பயரா இருக்காங்க என்று சொன்னார் துருதுருன்னு இருக்காங்க ஒன்னு சொன்னா நாலா பண்றான் சொன்னாரு இதுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை கொடுத்தது கொடுத்தது.

அதே வேளையில் எங்க வீட்டில் நரிமேட்டில் சின்னதாக பத்துக்கு பத்து கடை வைத்து அம்மன் என பெயர் வைத்தார்கள் வியாபாரம் ஏதோ போகுது என்று சொன்னார்கள். வெண்ணிலா கபடி குழு படம் பார்த்து ஒட்டுமொத்த திரையரங்கும் கைதட்டி கத்துறார்கள் எனக்கு கண் கலங்கிவிட்டது.

அங்கிருந்து வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது கல்யாணம் நடந்தது குழந்தை வந்தது ஜவுளிக்கடையில் துணி எடுக்க போறோம் ஜவுளிக்கடைகள் துணி எடுக்க வந்தவர்கள் என்னுடன் போட்டோ எடுக்க கூடியதால் கூட்டம் கூடியது.

இதற்கு முன்னால் அதே பில்டிங்கில் நான் வேலை பெயிண்டிங் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பில்டிங்கில் நடுவில் உட்கார்ந்து சாப்பிட கொண்டிருந்தோம். திடீரென முதலாளி வந்ததால் எல்லோரையும் எந்திரிக்க சொன்னார்கள். வேலையாள் இலையை இழுத்து ஓரமாக வைத்துவிட்டார் அங்க உட்கார்ந்து சாப்பிடு முதலாளி வர்றார் என்றார். இது அப்போது நடந்தது.

அதன் பின்பு இப்போது அதே பில்டிங்கில் நான் சென்ற பொது மேனேஜர் என்னிடம் வந்து உங்களை எம் டி ரூமில் உட்கார சொன்னார்கள் உங்களுக்கு துணி அங்கு வரும் என்று சொன்னார்.

அவர்களுக்கு என்னை தெரியாது மறந்துவிட்டார்கள் இந்த பில்டிங் தான் வேலை செய்யும் போது சாப்பிடும்போது இலையை ஓரமாக வைத்தார்கள் அன்னைக்கு எம்.டி வரும் போது சாப்பாட்டு இலையை இழுத்தார்கள் இன்றைக்கு அந்த எம்டி ரூமில் உட்கார வைத்துள்ளார்கள் என்று என் மனைவியிடம் சொன்னேன்.

அதேபோன்ற சம்பவம் நான் புதிய அலுவலகம் வாங்கும் போது நடந்தது. ஒரு அலுவலகம் பார்த்தேன் வாங்க சொல்லிவிட்டேன் ஆனால் அதிக பணம் கொடுத்து வாங்கிறேன் என்று எனது மனைவி என்னிடம் சண்டை போட்டால்.
பணம் இருக்க திமிரில் தான் அதிக பணம் கொடுத்து ஆபீஸ் ரூம் வாங்கி விட்டீர்கள் என்றார்.

நான் சொன்னேன் இந்த பில்டிங் 10 லட்சம் இல்லை எவ்வளவு சொல்லியிருந்தாலும் நான் வாங்கி இருப்பேன் நான் மயக்கம் போட்டு விழுந்த ஆபீஸ் இது தான் இந்த பில்டிங்க்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் வாங்க வேண்டும். சிலதுக்கு விலையே கிடையாது அது எனக்கு மட்டும் தான் தெரியும் என் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் கஷ்டங்கள் ஆவமானங்கள் இருந்தது ஆனால் முடியும் என்று நினைக்கும் போது முடியாது என்ற பல கேள்விகள் எலும்பும்.

பல வலிகளை தாண்டி சூரி இன்னைக்கு இங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு வாழ்க்கையில நிறைய அவமானங்கள் வரும் எதையும் ஒரு செகண்ட் எதையும் வாங்காதீர்கள் ரியாக்ட் பண்ணாதீர்கள் உங்கள் இலக்கு நோக்கம் முதல் தோல்வி வரும் ஆசைப்பட்டு ஜெயிச்சவனை விட அடிபட்டு ஜெயிச்சவன் தான் இங்கு பல பேர் அடிபட்டு ஜெயிச்சவினிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது. கடவுள் எல்லாத்தையும் தூக்கி விடுவார், விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை கடவுள் நிச்சயமாக தூக்கி விடாமல் இருக்க மாட்டார்.

போன் பார்த்து பார்த்து உறவுகளை விட்டு விடாதீர்கள் உறவுகள் ரொம்ப முக்கியம் உறவுகளை விடாதீர்கள் நான் சூரி நிக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் குடும்பம் தான் குடும்பம் இல்லை என்றால் நான் இல்லை குடும்பத்தை விடாதீர்கள் என உரையை நடிகர் சூரி நிறைவு செய்தார்.