• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு..,

ByS. SRIDHAR

Dec 27, 2025

புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இதில் ஜாக்டோ ஜியோ வில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதில் தமிழக அரசு 21 தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியதோடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர் ஆனால் ஆட்சி பொறுப்பேற்று நாங்களே வருடம் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன இதன் காரணமாக தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது வரும் ஆறாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதன் ஆயத்த மாநாடு நடைபெற்றது

இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன்

புதுக்கோட்டையில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்பட்டது

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றோடு நிறைவேற்றி இருக்க வேண்டும் ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை இனியாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

செவிலியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவைகளை முறையாக நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

உடனடியாக தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் தான் 21 தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அப்போது கூறினார் அந்த அடிப்படையில் எங்களுடைய கோரிக்கைகளை முதல்வராக நிறைவேற்ற வேண்டும்.

நாங்கள் ஆண்டு காலம் பல்வேறு போராட்டங்களை ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்தியது அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசினார்கள் அந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் பேச்சுவார்த்தையில் நடைபெறவில்லை.

பழைய ஓய்வு திட்டத்தை அறிவிப்பதற்கு ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தை நாங்கள் இறுதி கட்டமாக நாங்கள் பார்க்கிறோம்
ஜனவரி 6ஆம் தேதிக்குள் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி ஆறாம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கும்

நாங்கள் திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவதால் மாணவர்களின் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்தாதவாறு தான் எங்களுடைய போராட்டம் அமையும் இதுவரை எங்களுடைய போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படவில்லை அதேபோன்றுதான் தற்போது நடைபெறும்.

பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றுவோம் மற்றவைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினாலும் எங்களுடைய போராட்டம் தொடரும் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து மூன்றாம் தேதி சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.