இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் இன்று காரைக்காலில் கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகதாஸ் மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.




