சுதந்திர இந்தியாவின் 11வது பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார்.

இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவியவர் இவரே.
இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது, லோகமான்ய திலகர் விருது, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது, பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.




