அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு,மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்க புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய திமுக செயலாளர்கள் மா அன்பழகன், கோ அறிவழகன், தெய்வ இளையராஜன்,அரியலூர் நகராட்சி சேர்மன் சாந்தி உள்ளிட்ட முன்னிலை வகித்தனர்.

அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா,பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு, காங்கிரஸ் நகர தலைவர் மாமு சிவக்குமார், விசிக மண்டலச் செயலாளர் பெ.அன்பானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் தண்டபாணி,மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மீனா சாமிநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் க.அருண்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ம. ஜெயக்குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோபால க்கிருஷ்ணன்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தினை சிதைக்கும் முயற்சியினை கண்டித்து கண்டன உரையாற்றினர்.




