எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 நினவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு நகர கழகச் செயலாளர் பரமசிவம் தலைமையில் டிபி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்க மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் என் கிருஷ்ணராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கதிரேசன். கவிதா. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

இதே போல் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு இராஜபாளையம் வடக்கு நகர கழகச் செயலாளர் வழக்கறிஞர் துரை முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வனராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்குள் அன்னதானம் வழங்கப்பட்டது.




