பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாள் நாகர்கோவிலில் டிசம்பர் 24-ம் தேதி அவரது திருஉருவச் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

கழகத் தோழர்கள் அணி திரண்டு வாரீர் என கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் அறிக்கை விடுத்துள்ளார்.
கழக நிறுவனர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், கழக நிர்வாகிகள் அணி திரண்டு வாரீர் என கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்; அழைப்பு.விடுத்துள்ளார்.




