மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் குளிர்கால போர்வைகள், தலையணைகள், ரொட்டி பாக்கெட்கள் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தை காப்பகங்களில் அவர்கள் தேவை அறிந்து நாம் சேவை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த காலகட்டத்தில் இவற்றை வழங்கி, முதியோருடன் பேசியதில் மனநிறைவு அடைகிறேன் என்றார். சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், விஸ்வநாத், அருன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். முதியோர் இல்ல நிர்வாகி விஷ்வா நன்றி தெரிவித்தார்.




