• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனுமதியின்றி இயங்கிய கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்..,

ByP.Thangapandi

Dec 22, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி பகுதியில் இயங்கிய கழிவு நீர் வாகனங்களை
நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.,

இதில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும் செப்டிக் டேங்க் கிளினிக் வாகனம் உரிமம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.,

இதனையடுத்து உரிமம் பெறும் வரை 4 கழிவு நீர் வாகனங்களை இயக்காமல் இருக்க அறிவுறுத்தி ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ 1000 அபராதம் விதிக்கப்பட்டது.,

மேலும் கழிவு நீர் எடுப்பது தொடர்பாக 14420 என்ற இலவச எண்ணியில் தொடர்பு கொள்ள நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டது.