உசிலம்பட்டியில் கொம்புசீவி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் சரத்குமாருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு-
வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு கலை உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் வரும் 5 ம் தேதி ராஜபாளையத்தில் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளேன் அதில் ஒட்டு மொத்த கருத்துகளையும் தெரிவிப்பதாகவும் பேட்டி

.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டரில் கொம்புசீவி திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது.,இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாகவும் கௌரவ வேடத்தில் நடிகர் சரத்குமாரும் நடித்துள்ளனர்.,
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரும் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவருமான பொன்ராம் இப்படத்தை இயக்கி உள்ளார்., நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குனர் பொன்ராம்-வுக்கு மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.,
தொடர்ந்து இயக்குனர் பொன்ராம், நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தனர்.,

இத்திரைப்படத்திற்கு எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இத்திரைப்படத்தை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பார்க்கின்றனர் சென்டிமெண்ட் ஆக்சன் விரும்பி கைதட்டி பார்க்கின்றனர் ரொம்ப சந்தோசம்., உசிலம்பட்டி பகுதி எங்கள் ஊருக்கு வந்து உள்ளீர்கள் அதற்கும் சரத்குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.,
தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார்., தமிழகமே சொந்த மண்ணுதான் முக்கியத்துவம் என்னவென்றால் பொன்ராம் இருக்கின்ற ஊர் பொன்ராம் இயக்கத்தில் நடித்ததில் பெருமையாக இருக்கிறது தொடர்ந்து கடுமையான முயற்சி எடுத்து வெற்றி படமாக்க வேண்டும் எனவும் பல நல்ல கருத்துக்களை சொன்ன படம் எனவும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கடைசியில் நியாயத்தை கற்பித்து இருக்கிறது எனவும்,
இங்கு நிறைய படங்கள் வந்துள்ளது இங்கு எது தவறு என்ன தண்டனை என்பது சித்தரித்து நடந்ததை மிகைப்படுத்தாமல் இருந்தை அழிக்கப்பட்டு விட்டது. அதை சிறந்த கருத்தாக பார்க்கிறேன்.,

என் மூலமாக கருத்தை சொல்ல வந்ததை சிறப்பாக பார்க்கிறேன். என் மூலமாகவும் சண்முக பாண்டியன் மூலமாகவும் தவறு செய்யக்கூடாது தவறு மக்களிடம் சென்றடையகூடாது சரித்திர நிகழ்வுகளை எடுத்து கதையாக சொல்லி உள்ளார்.,
வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு கலை உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் வரும் 5 ம் தேதி ராஜபாளையத்தில்பொதுக் கூட்டத்தில் பேச உள்ளேன் அதில் ஒட்டு மொத்த கருத்துகளையும் தெரிவிப்பதாகவும் பேட்டியளித்தார்.




