மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி கருப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு நேற்று காலை அவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு உங்களின் குழந்தைகளின் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் ஆகையால் 9:00 மணிக்கு இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரவும் என குறுஞ்செய்தி சென்றதாக கூறப்படுகிறது.

குறுஞ்செய்தி தகவலை பார்த்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆதாரை அப்டேட் செய்துவிட்டு சென்றுவிடலாம் என காலை 9 மணி முதல் இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது 9:30 மணி மற்றும் 10 மணி வரை ஆதார் அப்டேட் செய்ய வேண்டிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிகிறது.
மேலும் அதற்கான எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு கூடிய நிலையில் தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி தகவலின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு போன் செய்து ஆதார் அப்டேட் செய்ய வந்திருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
ஆனால் எந்த ஒரு அதிகாரியும் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும்
போனில் பேசியஅதிகாரிகள் இனிமேல் தான் அதிகாரிகள் வருவார்கள் அங்கேயே இருக்கவும் என பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகளை பெற்றோர்கள் ஆதார் அப்டேட் செய்ய வர சொல்லி இருக்கிறார்கள் என அழைத்து வந்து பள்ளி முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வராத நிலையில் மாணவ மாணவிகள் தேர்வு எழுத செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பெற்றோர் தரப்பில் தொடர்பு கொள்ளும் அதிகாரிகளும் முறையான பதில் அளிப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




