• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய மையம் கட்டித் தர கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Dec 22, 2025

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சியில் உள்ள ஒத்த வீடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2017. 18 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மையத்தின் உள்புற சுவர்கள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அங்கன்வாடியில் உள்ள கழிப்பறை கடந்த சில மாதங்களாக பராமரிக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது இதனால் குழந்தைகள் கழிப்பறை செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் அங்கன்வாடியின் உள்புற சுவர்களும் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்து காணப்படுகிறது. அங்கன்வாடி முன்பு பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது இந்த மரத்தின் கீழே குழந்தைகள் விளையாடும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர் அங்கன்வாடிக்கு வரும் பணியாளர்களும் ஒரு வித அச்சத்துடன் பணி புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பள்ளி கட்டிடங்கள் அங்கன்வாடி மைய சுற்றுச்சுவர் கட்டிடங்கள் கழிப்பறை கட்டிடங்கள் ஆகியவை சேதமடைந்து நிலையில் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது செல்லம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சி ஒத்த வீடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மிக மோசமான நிலையில் சேதம் அடைந்து காணப்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உயிர் சேதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் அல்லது அருகிலேயே புதிதாக அங்கன்வாடி கட்டி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.