மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் புதிதாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் மட்டும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முள்ளி ப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முல்லை சக்தி என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் மற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்பு நீண்ட நாட்களாக வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை காவல்துறை மூலம்அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் இவ்வாறு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பக்தர்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு சபரிமலை மற்றும் திருச்செந்தூர் பழனி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு விரதமிருந்து செல்லக்கூடிய பக்தர்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் பஜனைக்காக தினசரி காலை மாலை என ஒன்று கூடி பஜனை பாடி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பேனர்களால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்படும் பேனர்கள் மற்றும் தென்கரை வைகை பாலம் அருகில் வைக்கப்படும் பேனர்கள் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் வைக்கப்படும் பேனர்கள் உள்ளிட்ட பேனர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவிகள் சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையின் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லை சக்தி என்பவர் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்துள்ளார் மனுவுக்கு பதில் அளித்த அதிகாரிகள் அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை காவல்துறை மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டு நாட்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் முல்லை சக்தி கூறினார். பிளக்ஸ் பேனர்களால் தினசரி பள்ளிக்கு செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை ஏற்படுவதாக கூறும் இவர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




