• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்..,

ByKalamegam Viswanathan

Dec 22, 2025

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை பாஜக முகூர்த்த தலைவர் எச்.ராஜா நேரடியாக வந்து அவர்களை சந்தித்தார். தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அமைதியாக உள்ளூரில் உள்ள இந்துக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருப்பார்கள் 6:30மணிக்குள் நிபந்தனை இன்றி வெளியிடப்பட வேண்டும். சந்தனக்கூடு நிகழ்விற்கு உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் அனுமதிக்கப்படக்கூடாது. உள்ளூரில் அனுமதிக்காமல் காவல்துறை இந்து விரோத செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

இந்து விரோத, முருகன் விரோத, ஸ்டாலின் அரசின் இந்து விரோத நடவடிக்கை மூலமாக நம்மளை இந்துக்கள் முஸ்லிம்கள் என்று பேச வைத்திருக்கிறார்கள்.

முகமதியர்கள் உரிமை கொண்டாடும் கட்டடமும் அங்கு இருக்கும் 33 செண்டுகள் தான் அவர்களுக்கு உரிமையானது. மீதமுள்ள மொத்த மலையும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தம்.

தமிழக சுற்றுலாத் துறையின் கையீட்டில் தற்காவை சொந்தம் கொண்டாடுவதே தேச விரோதம் தான். சிக்கந்தர் பாதுஷாவே ஆப்கான் நாட்டை சேர்ந்தவர். இந்த தர்கா இருக்கும் 33 சென்ட்க்கு வெளியில் இருக்கும் முருகன் கோவில் தளம் இருப்பதுதான் கள்ளத்தி மரம் அங்கு அவர்கள் கொடி எப்படி இருக்கலாம். அந்தக் கொடி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். கள்ளத்தி மரம் முருகப்பெருமானின் தலவிருட்சம் அது ஆக்கிரமிப்பு. 33 சென்ட் வெளியில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பது பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு.

அடுத்ததாக உள்ள இருக்கும் மக்களின் கோரிக்கை நாங்கள் இரண்டு பெண்கள் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றுகிறோம். அரசாங்கம் சொல்லும் காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் எப்ப மலையும் கோவிலுக்கு சொந்தமானது.

முஸ்லிம்கள் அங்கு சென்று சந்தனக்கூடு நடத்தலாம் என்றால் 21 நாட்களாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. நாளை முதல் இந்துக்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எந்த தடையும் இருக்கக் கூடாது. அப்படி இல்லை என்றால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கான வேலைகளை பாஜக செய்யும். 6:30 மணிக்குள் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபடுவார்கள் அதனால் வருகின்ற பின் விளைவுகள் அனைத்திற்கும் உள்ளூர் நிர்வாகம் தான் பொறுப்பு.

யாரும் பூரண சந்திரனைப் போன்ற முடிவுக்கு வர வேண்டாம். 1530இல் இருந்து ராமர் கோவில் அன்னியப் படையெடுப்பாளன் பாபரால் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் கோவில் கட்டப்பட்டு, மசூதி கட்டப்பட்டது ஆனால் அங்கு யாருக்கும் வந்து சென்று நமாஸ் செய்ய துணிச்சல் வரவில்லை. அதனால் நாம் 500 ஆண்டு போராடி அதை பெற்றிருக்கிறோம். அதனால் ஹிந்துக்கள் யாரும் அந்த முடிவுக்கு செல்ல வேண்டாம்.

முருகனும் ஸ்டாலினும் ஒன்று என்று யாரோ பேசினார்களாம். கபர்தார், ஹிந்து விரோதி உதயநிதி ஸ்டாலின்.

நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை என்று உதயநிதி சொன்னார், ராஜா ஹிந்து என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. ஸ்டாலின் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கொள்ளிக்கட்டையே உதயநிதி தான். அவர் பேசிய இந்து விராத தீய பேச்சு தான். அதனால் ஜாஸ்தி பேச வேண்டாம் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பையனை அடக்கி வையுங்கள்.

குடும்பம், கட்சி, அரசு என எதையும் உங்களால் அடக்கி வைக்க முடியவில்லை. இருந்தாலும் உங்கள் பையனை கொஞ்சம் அடக்கி வையுங்கள் பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.

இது ஆன்ட்டி இந்து கவர்மெண்ட். பாஜக அலுவலகத்திலும் ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம். அது பிரச்சனை இல்லை.

முதல்வர் அவர்களே கொஞ்சம் உணர்வுக்கு வாருங்கள். ஆன்ட்டி முருகனாக இருந்தால், முருக பக்தர்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

சேகர் பாபு யாரு. அவரின் சின்ன எஜமான் கிறிஸ்தவன் என்று கூறிய போது இவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லாமல் அல்லேலூயா என்று சொன்னார் இந்த அல்லேலுயா பாபு. ஒரு பாதிரியார் சொல்கிறார் சேகர் பாபு ஒரு கிறிஸ்தவர் என்று. அவர் கிறிஸ்தவர் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்டது இந்து எதிரானது.

அறநிலையத்துறை கோவில் பணத்தை திருடி தின்று இருக்கிறார்கள். கோவிலில் கொள்ளை அடிக்கிறீர்கள். முருகன் மாநாட்டிற்கு நடைபெற்றதற்கு கணக்கு காட்டியிருக்கிறார்களா.

முதல்வர் இந்து விரோத தீய சக்தி இல்லை என்றால் நடவடிக்கை எடுத்திருப்பார் அப்படி செய்யாததால் தேர்தலில் மக்கள் உங்களை தூக்கி எறிவார்கள்.

சிக்கந்தர் பாதுஷாவிற்கு கோரிப்பாளையம் மசூதியில் கல்லறை உள்ளது என்று சுற்றுலாத்துறை கையேடு சொல்கிறது. ஒருவருக்கு இரண்டு இடத்தில் கல்லறை இருக்க முடியாது. எப்படி ராமஜன்ம பூமியில் கட்டிடத்தை சுற்றி தொல்லியல் துறை அகழ்வாய்வு நடத்தி அதில் கோவில் இடித்து தான் கட்டப்பட்டது என்று சொன்னதைப் போல திருப்பரங்குன்றம் முருகன் மலை உருவ அமைப்பு முகமதியர்கள் எடுத்தார்கள் ஆனால் அதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதில் உருவங்களை பார்த்தாலே ஹிந்து உருவம் தெரியும். அதன் அமைப்பின் உண்மை தன்மை பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்.