உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13 ஆண்டுகால பெருமையுடன் கொண்டாடுகிறது.உடல்நலம் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பைத் தொடரும் வகையில் பங்களிப்பை இந்த நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

கோவை மாநகரின் விளையாட்டு மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ‘பவர்டு பை’ (Powered By) எனும் பெரும் நிதி ஆதரவு வழங்கும் ஸ்பான்சராக இந்த நிறுவனம் இருந்து வருகிறது.
இந்த மாரத்தான் இப்பகுதியின் ஒரு அடையாள நிகழ்வாக வளர்ந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பின் அடையாளமாக மாறியுள்ளது.இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் நிதி,புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம்கள்,ஆலோசனை மற்றும் தொடர் பராமரிப்பு, நோய்த்தணிப்பு சேவைகள் (Palliative Care), சிகிச்சை ஆதரவு மற்றும் அறுவை சிகிச்சை,கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை,நோய் கண்டறிதல், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கான நிதி உதவி போன்ற தனது திட்டங்களை விரிவுபடுத்த கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷனக்கு உதவியுள்ளது.

மேலும் இம்முறை இந்த நிகழ்வில் பங்கேற்கும் 25,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களில் 1,725-க்கும் மேற்பட்டவர்கள் எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.




