மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வரும் 21ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைதி பேச்சு வார்த்தையில் குறிப்பிட்ட பிரிவினர்களை மட்டுமே அழைத்து பேசியதாகவும் தங்களை அழைத்துப் பேசவில்லை எனவும் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் உள்ள கள்ளத்தி மரத்தில் கட்டப்பட்ட கொடியை இறக்கி வேலை செய்வதற்காக நான்கு பேர் சென்றதை கண்டித்து கோட்டை தரும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர் .
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா ஆகியோர் கோட்டை தெரு பொது மக்களிடம் பேசினர் .

அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலைக்கு மேல் மேல் யாரும் செல்லகூடாது எனவும். இதுதொடர்பாக புகார் அளிப்பதாகவும் தங்களையும் மலை மேல் செல்ல அனுமதிக்க கோரியும் இல்லாவிட்டால் வேறு யாரும் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பழனியாண்டவர் கோவில் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.




