கரூரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நடிகர் விஜய் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் அனைத்துக்கும் கருத்து சொல்ல வேண்டும், நடுநிலையான கருத்து சொல்ல வேண்டும். பாஜக தான் அவரை இயக்குகிறது. பாஜகவிடம் அதிமுக சரணடைந்தது போல, இன்னொரு புறம் திமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காக விஜய் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி வெற்றி பெறாது. விஜய் பாஜகவின் பி-டீம்.
ஒவ்வொரு மாவட்ட பொதுக்கூட்டங்களிலும் தொகுதிகள் குறித்து பேசி வருகிறோம். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி எங்கள் பட்டியலில் இருக்கிறது. திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கும்போது, அரவக்குறிச்சி தொகுதியை கேட்போம். அண்ணா, கலைஞர் காலத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள். நாங்கள் வாங்கும் இடத்தில் இருக்கிறோம், திமுக கொடுக்கும் இடத்தில் இருக்கிறது.

அரவக்குறிச்சி தொகுதி வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். கொடுப்பீர்களா என்று திமுகவிடம் கேளுங்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வெற்றி பெற்ற தொகுதியில், அரவக்குறிச்சியும் ஒன்று. அதனால் வரக்கூடிய தேர்தலில் அது குறித்து பேசுவோம் என்றார்.




