மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததுடன் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன் செல்லம்பட்டி எம் வி பி ராஜா வாடிப்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா முன்னாள்மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் வழக்கறிஞர் திருப்பதி அம்மா பேரவை வெற்றிவேல் தனராஜன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் விவசாய அணி மாவட்ட இணைச்செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் அன்னபூர்ணா தங்கராஜ் சிவசக்தி எஸ் முருகன் அவைத் தலைவர் முனியாண்டி துரைக்கண்ணன்மகளிர் அணி பஞ்சவர்ணம் லட்சுமி சாந்தி மாரிமுத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா பேரூர் துணைச்செயலாளர் தியாகு ஜெயபிரகாஷ் பத்தாவது வார்டு மணி பாலகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் மருத்துவர் கருப்பையா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி ராஜேந்திரன் நாச்சிகுளம் தங்கப்பாண்டி சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ் பேட்டை முத்துக்குமார் மருது சேது மாரி சுரேஷ் வைகை ராஜா பாலா அப்பாச்சி கண்ணன் உமா மாரி சரத் ஆறுமுகம் அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல் மன்னாடிமங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் குருவித்துறை விஜய் பாபு காசிநாதன் மேலக்கால் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.




